பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 15 வருடங்களாக அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு தென் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் இளையதளபதி விஜய் கலந்து கொண்டது ஹைலைட்டாக பேசப்பட்டது.
சமூக வலைதள பக்கங்களில் கீர்த்தி சுரேஷ் பற்றி பல கிசுகிசு தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவர் தனது காதலை பற்றி மனம் திறக்கவில்லை. ரகசியமாகவே பாதுகாத்து வந்தார். அதன் பின்பு இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்ததும் உடனடியாக அந்தோணி தட்டிலை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடித்த கையுடனே மஞ்சள் தாலியுடன் பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்த ஆடையும், பேபி ஜான் படத்தின் ஹீரோ வருண் தவாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் என்னை திருமணம் செய்து கொண்டது அந்தோணிக்கு சங்கடமாக உள்ளது என மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மாறியதாக தெரியவில்லை. அதற்கு காரணம் நான் ஏற்கனவே அந்தோணி உடன் டேட்டிங் சென்று உள்ளேன். தற்போது அப்படித்தான் இருக்கின்றேன். அதனால் எனக்கு திருமண வாழ்க்கையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
ஆனால் எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுக்கின்றார்கள். நிறைய அட்டென்ஷன் கிடைக்கின்றது. இது எனக்கு பழகிவிட்டது என்றாலும் எனது கணவருக்கு இது பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு இந்த விடயம் சங்கடமாக உள்ளது. ஆனாலும் எனக்காக எதுவுமே அவர் சொல்வது இல்லை. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுகின்றார்.
அந்தோணி தனது இன்ஸ்டா கணக்கை கூட பிரைவேட்டாக வைத்துள்ளார்.. புகைப்படங்களை வெளியிடுவது கூட அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் எனக்காக போஸ் கொடுக்கின்றார். மீடியா முன்பு வருவதற்கு கூச்ச பட்டாலும் எனது கேரியருக்கு அது மிகவும் முக்கியமானது என்று அவர் புரிந்து நடக்கின்றார் என்று தனது கணவரை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
மேலும் இவர்கள் காதலிக்கும் போதே உன்னுடைய கனவை நீ எப்போதும் தொடலாம் என்று அந்தோணி சப்போர்ட்டாக இருந்துள்ளார் எனவும், தன்னைப் பற்றிய வதந்திகளின் போதும் கூட தனக்கு பிரச்சனை தராமல் சப்போர்ட்டாக இருந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
Listen News!