ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதில் பங்கு பெற்றதற்காக பல முன்னணி நட்சத்திரங்களும் அணி திரண்டு சென்றுள்ளார்கள்.
இந்தியாவின் பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கலைக்கட்டி வரும் நிலையில், இதனை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட நட்சத்திரங்கள் தொடக்கம், உலக பணக்காரர்கள், பிரபல பாடகர்கள், டான்ஸர்கள் என பலரும் தமது திறமையை வெளிக்காட்டி வருகின்றார்கள்.

இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை மேலும் மெருகூட்டுவதற்காக இதில் கலந்துகொண்ட பிரபல ராப் பாடகர் ரேமாவுக்கு "CALM DOWN'' என்ற பாடல் பாடுவதற்கு 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் ஃப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாட்டு பாடிய பாடகிக்கும் இது போலவே கோடிக்கணக்கில் வாரி கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!