• Jan 19 2025

நானும் ஏமாந்துட்டன்.. இதுக்கு இந்தியன் படத்த ரீ ரிலீஸ் பண்ணி இருக்கலாம்! ரச்சிதா விமர்சனம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக கருதப்பட்டது. அதில் கமலஹாசன், சங்கர் மற்றும் ஏ.ஆர் ரகுமானின் கூட்டணி பலரையும் பிரமிக்க வைத்தது.

மேலும் இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தொழில்நுட்பம், திரைக்கதை மற்றும் மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர்.

தற்போது கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த படத்தை பார்த்து நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதற்குப் பதில் இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். தற்போது இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே கமல் நடிக்கும் படங்கள் ஏதும் வெற்றி பெறாத நிலையில், லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத்தொடர்ந்து கல்கி படமும் ஆயிரம் கோடியை எட்டியுள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படம் தற்போது படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement