• Jun 13 2026

இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’.. படப்பிடிப்பு தளத்தில் வெடித்த சர்ச்சை.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘பாக்கெட் நாவல்’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனங்களான TDKF மற்றும் கினோ ஃபிஸ்ட் மூலம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிகை மாளவிகா மோகனன், கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி மற்றும் நடிகர் கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜனுடன் அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், அந்த புகைப்படங்களில் ஒன்றில் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த “அழகான ஒட்டகச் சிவிங்கியே...” என்ற வாசகமும், மாளவிகாவின் தோற்றமும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

வித்தியாசமான கதைக்களங்களுக்காக அறியப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவுகிறது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement