• May 10 2024

படிக்கட்டில் கூட ஏறமுடியாத அளவுக்கு பெரிய ஆடை அணிந்து பிரபல நிகழ்ச்சிக்கு சென்ற சிவாங்கி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல விஜய் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமனவர் தான் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் தனது மெல்லிய குரலால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் தற்பொழுது குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகின்றார்.

இந்த நிழ்ச்சியில் 3 சீசன்களிலும் பிரபல்யமான இவர் தற்பொழுது படவாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனது நகைச்சுவை திறனால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு ஹீரோயின்கள் போல நீளமான உடை அணிந்து வந்திருந்தார். அதன் புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தன.

https://twitter.com/sivaangi_k/status/1534411207897145347

இந்நிலையில் சிவாங்கி அந்த உடை அணிந்து படியில் ஏற கஷ்டப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவரால் நடக்க முடியவில்லை என அவரை சுற்றி நான்கு பேர் அவரது உடையை தூக்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement