• May 10 2024

மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கலாமா?- தொகுப்பாளர் இவர்தானாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே பாரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம், இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் போட்டியாளர்களின் சுவாரஷ்யமான சண்டை, சச்சரவுகள் தான்.

பிக்பாஸ் சீசன் 5ற்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஓடிடியில் நடத்தப்பட்டது. இதற்கிடையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சில எபிசோட்களை தொகுத்து வழங்கிய அவர் விக்ரம் ஷூட்டிங் காரணமாக பின்னர் விலகினார். இதனால் மிகுதியை சிம்பு தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது விக்ரம் திரைப்படம் ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும், அதிலும் கமல் ஹாசன் அவர்களே தொகுப்பாளராக வருகின்றார் எனவும் சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement