விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் விஜயா என்ற கேரக்டரில் நடித்து வரும் அனிலா, பிரபுவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்ததாகவும் ஆனால் அந்த படம் வெளியாகவில்லை என்ற சோகம் தனக்கு இன்று வரை இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா என்ற கேரக்டரில் நடிப்பில் கலக்கி வருபவர் அனிலா. இவர் மீனா மற்றும் முத்துவுக்கு மட்டும் கொடுமைக்காரியாகவும் அதே நேரத்தில் மனோஜ், ரவி மற்றும் அவர்கள் இருவரின் மனைவிகளுக்கு பண்புள்ள, அன்புள்ள மாமியாராகவும் நடித்து வருகிறார். மீனா மற்றும் முத்து மீது மட்டும் வெறுப்பை காட்டி வரும் அவரது நடிப்பிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அதே கேரக்டரில் தான் அனிலா நடித்து வருகிறார் என்பது பலர் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’சின்னத்தம்பி’ என்ற சீரியல் மூலம் தான் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கினேன் என்றும் அந்த சீரியல் தான் எனக்கு முதல் முதலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்தது என்றும் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து ’சின்னத்தம்பி’ படத்தில் நடித்த பிரபுவுடன் ஒரு படத்தில் தான் ஜோடியாக நடித்ததாகவும் அந்த படத்தின் சில காட்சிகள் கூட படமாக்கப்பட்ட நிலையில் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகுந்த வருத்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சீரியலில் மட்டுமின்றி ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் விரைவில் தனது ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!