• Jan 19 2025

ரேஷ்மா ரீஎண்ட்ரி.. டபுள் ஆக்சனில் வெங்கட்.. சுறுசுறுப்பாகிறது ‘கிழக்கு வாசல்’ சீரியல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ என்ற சீரியலில் ரேஷ்மா தான் நாயகி என்ற நிலையில் அவர் இல்லாமல் கடந்த சில வாரங்களாக சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாயகி ரேஷ்மா ஏன் சில வாரங்களாக வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகி விட்டாரா? அல்லது அவரது கேரக்டருக்கு கதையில் முக்கியத்துவம் தரவில்லையா போன்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விஜய் டிவி வட்டாரத்தில் விசாரித்தபோது ரேஷ்மா தொடரிலிருந்து விலக வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும் அவருக்கு பெர்சனல் வேலை இருப்பதால் சில நாட்கள் மட்டும் அனுமதி பெற்று சென்று இருப்பதாகவும் அதனால் கதை தற்போது கதாநாயகன் வெங்கட்டை சுற்றி நகர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

இந்த சீரியலில் வெங்கட் சம்பந்தமான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக இந்த சீரியல் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதுமட்டுமின்றி ரேஷ்மாவும் இன்னும் ஒரு சில நாட்களில் சீரியலில் இணைந்து விடுவார் என்பதால் கதைக்களம் சுறுசுறுப்பாகும் என்றும் கூறப்படுகிறது. முதன்முதலாக வெங்கட் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்பதும் இனி கதையை எப்படி நகர்த்தி கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement