சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க தான் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்புவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த நிலையில் கதையும் முடிவு செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் தான் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெற்றிமாறன் சின்ன பட்ஜெட் படமான ’விடுதலை’ படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு சிம்பு படத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
இந்த நேரத்தில் தான் வெங்கட் பிரபு ’மாநாடு’ படத்தின் கதையை சுரேஷ் காமாட்சி இடம் கூற வெங்கட் பிரபு படத்தை முதலில் முடித்து விடுவோம் என்று ’மாநாடு’ படம் தொடங்கப்பட்டதாம். ஆனால் ’மாநாடு’ படம் பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் முடித்த நிலையில் வெற்றிமாறன் - சிம்பு படம் மிஸ் ஆனதாக சுரேஷ் காமாட்சி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் ’நல்லவேளை சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நடிக்கவில்லை, ஒருவேளை அப்படி நடித்திருந்தால் ’மாநாடு’ என்ற மிகப்பெரிய வெற்றி படம் அவருக்கு கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி வெற்றிமாறன் ஒரு படத்தை முடிப்பதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வார் சிம்புவும் அப்போதெல்லாம் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்பதால் அப்படி ஒரு பக்கம் படம் தொடங்கப்பட்டிருந்தால் இன்று கூட அந்த படம் முடிந்திருக்காது’ என்று சிலர் கிண்டலுடன் கூறி வருகின்றனர்.
Listen News!