• May 19 2024

இல்லாத என்ன பற்றி பேச நீங்க யாரு-தன்னை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோவான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யம் ஆனவர் தான் ஷிவாங்கி. இதற்கு முதல் சூப்பர் சிங்கர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கு கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பெரிய அளவில் ரீச் ஆனார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் அண்ணனின் திருமணத்திற்கு சென்றதால் கடந்த வார எப்பிஷோட்டில் அவரால் பங்குபற்ற முடியவில்லை. குக் வித் கோமாளி ரசிகர்கள் ஒருவர் டிவிட்டரில் இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்பது போல பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷிவாங்கி, இல்லாத என்ன பத்தி வெறுத்து பேசுவதற்கு இருக்குற செம்ம கோமாலிஸ் பத்தி பேசுனா இன்னும் சூப்பர் இருக்கும் யோசித்துப் பாருங்கள்"ப்ரோ என பதிவிட்டுள்ளார். சிவாங்கிய விமர்சித்த அந்த நபரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement