• May 19 2024

10 நாள் முடிவில் விக்ரம் படம் செய்த சாதனை-குஷியில் படக்குழு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் திகதி வெளியான திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

தற்போது படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். இந்த வருடம் வெளியான தமிழ படங்களில் இப்படம் மாபெறும் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement