• Aug 29 2024

இந்தியன் 2’: லைகாவுக்கு நஷ்டமில்லை.. நஷ்டம் ஷங்கர், கமல்ஹாசனுக்கு தான்.. எப்படி தெரியுமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய்  என்று கூறப்படும் நிலையில் தற்போது தான் 100 கோடி ரூபாய் என்ற வசூலை எட்டி உள்ளதாகவும் படத்தின் முதலீட்டு பணம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தால் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்படும் நிலையில் பெரிய அளவில் நஷ்டம் இல்லை என்றும் ஆனால் இந்த படத்தில் நடித்த கமலஹாசன் மற்றும் படத்தை இயக்கிய ஷங்கர் ஆகிய இருவருக்கும் தான் மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்க முடிவு செய்து ஷங்கர் மற்றும் கமல்ஹாசனிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது கமல் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருக்குமே தலா 36 கோடி ரூபாய் சம்பளம் என்று பேசப்பட்டது. அதன் பிறகு இந்த படத்தின் லாபத்தில் இருவருக்கும் தலா 33% பங்கு அளிப்பதாகவும் லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.

அதாவது இந்த படத்தின் லாபம் 300 கோடி ரூபாய் வந்தால் அதில் கமல்ஹாசன்,  ஷங்கர் மற்றும் லைகா ஆகிய மூவரும் தலா 100 கோடி ரூபாய் பிரித்துக் கொள்வது என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.  இதனால் தான் கமல்ஹாசன் 36 கோடி ரூபாய் என்ற குறைந்த சம்பளத்திற்கு சம்மதித்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி ஒரு பைசா கூட லாபம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் 36 கோடியை தவிர வேறு லாபம் அவர்களுக்கு கிடையாது என்பதால் அவர்களுக்கு நஷ்டம். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், திரையரங்கு வசூல் ஆகியவை எல்லாம் சேர்த்தால் லைகா நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement