• Jul 22 2026

கமலாவுக்கு விழுந்த செருப்படி.. உதறி தள்ளிச் சென்ற ராதிகா! ரொம்பவும் எமோஷனலான ஈஸ்வரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மயூ நடந்த உண்மை எல்லாம் சொன்னபடியினால் ஈஸ்வரி நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டதோடு தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக வழக்கு கொடுத்த கமலாவுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து நீதிமன்றத்தின் வாசலில் பாக்யாவின் குடும்பம் எல்லாரும் சந்தோஷத்தில் நின்று கொண்டிருக்க, அங்கு கமலா, மையூ, ராதிகா ஆகியோர் வருகின்றார்கள். இதன்போது பாக்கியா மையூவுக்கு நன்றி சொல்லி கட்டி பிடிக்க போக ராதிகா அவரை தடுத்து என்ன செய்கிறீர்கள்? இந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது? என பேசி விட்டு செல்கிறார். 

அதன்பின்பு என்னையும் பொய்க்காரி ஆக்கிட்டியே உனக்கு வெட்கமா இல்லையா? இப்படி பொய் கேஸ் கொடுக்க.. இனி வீட்டு பக்கம் வந்துடாத என கமலாவுக்கு ராதிகா திட்டிவிட்டு செல்லுகிறார்.


இதை அடுத்து ஈஸ்வரி வீட்டுக்கு செல்ல, அவரை ஆர்த்தி எடுத்து  உள்ளே அழைத்துச் செல்ல, இனியாவும் ஜெனியும் அவரை கட்டிப்பிடித்து அழுகின்றார்கள். அமிர்தா ஒரு ஓரமா நின்று அழுது கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செல்லுகிறார் ஈஸ்வரி.

மேலும் பாக்கியா கையை பிடித்து என் மகன் கூட எனக்கு எதிரா சாட்சி சொல்லிட்டான். ஆனா நீ கடைசி மட்டும் என்னை நம்பினா. எத்தனை ஜென்மம் கிடைத்தாலும் நீதான் எனக்கு மருமகளாக வரவேண்டும் என ரொம்பவும் எமோஷனலாக பேசுகிறார். பிறகு ஈஸ்வரியை குளிக்க சொல்லிவிட்டு அவருக்கு தலை துடைத்து தலை சீவி பொட்டு வைத்து எல்லாம் செய்து விடுகிறார் பாக்கியா. இது தான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement