• Apr 26 2024

ரெட் கார்டு கொடுத்து அனுப்புங்க- பிக்பாஸையே மிரட்டிய தனலக்ஷ்மி- திட்டி தீர்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 இல் இந்த வாரம் முழுவதும் பயங்கரமான சண்டை நடந்து வருகிறதைக் காணலாம். குறிப்பாக தனலக்ஷ்மி மற்றும் மணிகண்டனுக்கும் இடையிலே ஏற்பட்ட மோதலானது பார்வையாளர்களையே அதிர்ச்சியடையச் செய்தது. அத்தோடு தனலக்ஷ்மியை மணிகண்டன் அடித்து விடுவாரோ என்ற பயமும் பார்வையாளர்களிடையே நிலவியது.

மேலும் மணிகண்டன் தன்னை தள்ளி விட்டதாக பயங்கரமாகக் கத்தினார்.இதன் பின்பு தனலட்சுமி கேமராவுக்கு முன்பு வந்து நின்று பிக் பாஸிடம் கூறியதாவது, என் டீம் நான் சொன்னதை கேட்டு ரெட் கோட்டுக்குள்ள போகாமல் அவங்க பொருளை எடுத்து, 2 பொருளை கையில் வச்சுருக்காங்க. நீங்கள் அதை கேமராவில் நோட் பண்ணியிருப்பீங்க. நான் அங்க இருந்து பார்த்துக்கிட்டே தான் இருந்தேன் என்றார்.


அந்த டீம் 6 பொருளை உள்ளே இருந்து தான் எடுத்தாங்க. அதை எல்லாம் ஸ்டோர் ரூமில் அனுப்பிட்டீங்கனா, கண்டிப்பா அடுத்த வாட்டி என் டீமை உள்ளேயே போக சொல்லுவேன். நீங்கள் தான் ரூல்ஸை ஃபாலோ பண்ண சொன்னீங்க. அதை கேட்டு தான் ரூல்ஸை ஃபாலோ பண்ணினேன். நாங்கள் எப்படி உதாரணமாக இருக்க வேண்டுமோ, எங்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்க வேண்டும் என்றார் தனலட்சுமி.


பிக் பாஸ் எப்படி நடக்க வேண்டும், ரூல்ஸை ஃபாலோ பண்ண வேண்டும் என்று கூறியதோடு அவரையே மிரட்டியிருக்கிறார் தனலட்சுமி. இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும். தனலட்சுமிக்கு என்ன திமிர், தலைக்கணம் இருந்தால் இப்படி பேசுவார் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement