• Jan 19 2025

இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கே வாத்தியான சாண்டி மாஸ்டர்! பிரபு தேவாவை வச்சு செய்த தரமான சம்பவம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாக நடனப்புயல் பிரபுதேவாவை  கூறலாம். நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என சினிமாவில் பல பரிமாணங்களில் தனது திறமையை காட்டி வருகின்றார். 

அதிலும் குறிப்பாக நடனத்திற்கு என்றே பெயர் போனவர் இவர். இந்திய அளவில் முன்னணி நடன கலைஞராக இருக்கும் இவரை, ரசிகர்கள் செல்லமாக "இந்திய மைக்கேல் ஜாக்ஸன்" என்றும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில், பிரபுதேவா மாஸ்டருக்கு கொரியோகிராஃபராக சாண்டி மாஸ்டர் பழக்கிய நடனக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

சின்னத்திரையில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்னும் ரியாலிட்ரி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் சாண்டி. இதனைத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தார்.


மேலும் விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் கடமையாற்றி இருக்கின்றார். இருப்பினும் இவரை பிரபல்யமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக அருமையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சாண்டி மாஸ்டர். இவ்வாறு பல பரிமாணங்களில் பிரபலமாகி வரும் இவர், பிரபு தேவாவின் தீவிர ரசிகர் ஆவார்.


இவ்வாறான நிலையில், கோட் படத்தில் நடிக்கும் பிரபு தேவாவின்  படப்பிடிப்பு இலங்கைக்கு பதிலாக கேரளாவில் நடைபெற்றது. நடிகர் விஜய் அங்கே கலந்து கொண்டு நடித்தார்.

இதை தொடர்ந்து, தற்போது இலங்கையில் நடக்கும் ஷூட்டிங், அதற்கு சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃப் பண்ணுவதாகவும், ஏர்போர்ட் செட்டப் போட்ட  பல இடங்களில் நடிகர் பிரபுதேவா நடனமாடும் காட்சிகளை தற்போது சாண்டி மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் அதில் குறிப்பிடுகையில், எனக்குள் இருக்கும் ரசிகனுக்கு கனவு நினைவானது எவ்வளவு ஒரு அற்புதமான தருணம். என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு தந்தமைக்கு நன்றி மாஸ்டர்..என பதிவிட்டுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரபு தேவா கோட் படத்தில் மட்டுமின்றி அனுஷ்காவுடன் ஒரு படத்திலும், ஏ. ஆர் ரகுமான் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement