விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க வந்துள்ள காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இன்று முத்துக்குமரன் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் "முத்து பிரீஸ் என்று சொல்கிறார்" உடனே முத்து பிரீஸ் ஆகி இருக்க ஸ்டோர் ரூம் கதவினை திறந்து கொண்டு முத்துவின் அம்மா மற்றும் அப்பா வருகிறார்கள். முத்துவை கண்டதும் கட்டியணைத்து அழுகிறார் அம்மா. முத்து அழக்கூடாது அழக்கூடாது என்று சொல்லி தானும் அம்மா அப்பாவை கட்டி பிடித்து அழுகிறார்.
பின்னர் முத்துவின் அம்மா எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்கிறார். முத்துவுடன் தனிமையில் பேசும் போது முத்துவின் அம்மா " நீ இங்க விளையாடுறது நம்ம பரம்பரைக்கே பெருமைபா" என்று சொல்கிறார். முத்துவின் அப்பா "நல்லா விளையாடு சாமி இன்னும் சிறப்பா விளையாடனும்" என்று கூறுகிறார். இதனை கேட்ட முத்து "நீங்க ரெண்டு பேரும் போட்ட உழைப்பு அதுக்கு கிடைத்த வளர்ச்சி தான் இது அவ்வளோதான்" என்று கூறியுள்ளார். அத்தோடு ப்ரோமோ நிறைவடைகிறது.
Listen News!