• Mar 15 2025

எனக்கு மார்க்கெட் போச்சா? உங்க ட்ரோல் என்னை ஒன்னும் பண்ணாது! கடுப்பான நடிகர் ஸ்ரீகாந்த்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய பேட்டில் "என்னுடைய மார்க்கெட் போயிருச்சு அதான் இந்த மாதிரி ஹீரோயின் கூட நடிக்கிறேன் என்று ட்ரோல் பண்ணுறாங்க" என்று வெளிப்படையாக கூறிய விடயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்கு பின் "தினசரி" எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் சிந்தியா லூர்ட்தே நடிக்கிறார். இந்தப் படம் வெளியாகுவதற்கு முன்பே பலவாறு ட்ரோல் செய்கிறார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். தொகுப்பாளினி "இத்தனை வருட சினிமா உங்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன?" என்று கேட்கிறார். அதற்கு ஸ்ரீகாந்த இவ்வாறு கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் " நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன், இன்னும் கத்துக்க இருக்கு. ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல நாங்க ஏதாவது செஞ்சா ஏன் ட்ரோல் பண்ணுறாங்கன்னு தெரியல. சமீபத்துல கூட நான் இப்ப நடிச்சி இருக்குற படத்தின் கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. ஹீரோயினி கூட ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா பலரும் ஸ்ரீகாந்த் மார்கெட் போனதால் தான் இந்த மாதிரியான ஹீரோயின்களுடன் எல்லாம் நடிக்கிறார் என கிண்டல் பண்ணுறாங்க" என்று கூறினார்.


மேலும் பேசுகையில்  "இவங்க தான் நடிக்கணும். இவங்களுக்கு தான் அந்த தகுதி எல்லாம் இருக்குன்னு யாரு சொல்லுறது. இது சுதந்திரமான உலகம். நடிகைங்கன்னா இப்படி தான் இருக்கணும்ங்குற பென்ச் மார்க் வைக்குறது யாரு. இப்படி நிறைய விஷயம் நடந்துகிட்டு இருக்கு. நான் சோசியல் மீடியாவில் இல்லை. என்னை ட்ரோல் செய்வதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அது எந்தவிதத்திலும் என்னை தாக்காது" என வெளிப்படையாக கூறியுள்ளார்.   


Advertisement

Advertisement