சூர்யாவின் குடும்பத்தில் குழப்பம் பண்ணும் சமந்தா-திடீர் தகவலை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே சேர்த்த இவர் சோலோ ஹீரோயினாவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.. சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இது தவிர சமீபத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் உலகளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அத்தோடு இவரும் இவரது காதல் கணவரான நாக சைதன்யாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் விவாகரத்தான சமந்தா நடிகர் சூர்யாவுக்கு வலை வீசுவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகை சமந்தா அளித்துள்ள பேட்டியில் தான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது காக்க காக்க படம் ரிலீஸ் ஆனதாகவும் அப்போது முதலே தான் சூர்யாவின் தீவிர ரசிகையாகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதனை மேற்கோள் காட்டியுள்ள பயில்வான் ரங்கநாதன், ஒரு வேளை அப்படி இருக்குமோ என குறிப்பிட்டு, சூர்யா ரொம்பவர் நல்லவர்.

அவரும் ஜோதிகாவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். வேண்டாம் சமந்தா குடும்பத்துல குழப்பம் பண்ணாதீங்க… சமத்தான பிள்ளையா நடந்துக்குங்க சமந்தா என அறிவுரை கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ரசிகை என்று கூறியது ஒரு குத்தமா? அதை இவ்வளவு பெரிதாக்கி விட்டீர்களே என கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்