நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இவர் தற்பொழுது அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 22-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரைய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ, இருவரும் ரசிகர்களிடம் டுவிட்டரில் உரையாடினர். அப்போது நடிகர் தனுஷ் பற்றி பேசுகையில், “இந்த படத்தில் அவருக்கு இரண்டு பெரிய சண்டைக் காட்சிகள் உள்ளன. நாங்கள் அவருடைய தீவிர ரசிகர்கள். அவருடன் வேலை செய்வதை நாங்கள் மிகவும் விரும்பினோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் தனுஷின் கதாபாத்திரம் குறித்து பேசிய போது, “இந்த படத்தில் தனுஷ், உலகின் மிகச்சிறந்த அசாசின்களில் ஒருவராக நடிக்கிறார். அவரை மனதில் வைத்து தான் அந்த கதாபாத்திரத்தை எழுதினோம். அவரது கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு விரைவில் ஒரு புதிய படத்தை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தனர். ரூசோ பிரதர்ஸ்-ன் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்