தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. தனது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் உச்சந் தொட்ட நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.

தனது கணவரான நாகசைத்தன்யாவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து வாழும் சமந்தா தனது கெரியரில் அதிக கவனம் செலுத்துவதோடு பிஸியான நடிகையாகவும் வலம் வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
சமீபத்தில் குஷி பட படப்பிடிப்பில் சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டாவிற்கு விபத்து ஏற்பட்டதாகவும் உடனே படக்குழு அவர்களை மீட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் சமந்தாவை குறித்து ஒரு ரசிகர் மோசமாக போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகைகள் எப்போது தனது செல்ல நாய்களுடன் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் சமந்தா ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ஒரு ரசிகர், கடைசியில் அவர் நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப்போகிறார் என பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த சமந்தா அப்படி நடந்தால் சந்தோஷம் தான் என பதில் கொடுக்க அந்த டுவிட் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்
- நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே
- ஹைதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் அஜித்- AK61 லேட்டஸ்ட் அப்டேட்!
- ‘ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல’-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்
- மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்