• Nov 13 2025

மேனேஜர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட திவ்யா.. Watermelon ஐ வைத்து ஃபன் எடுக்கும் ஹெஸ்ட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை  பூர்த்தி செய்துள்ளது. இந்த சீசனில் பங்கு பற்றிய 20  போட்டியாளர்களுள்  5 பேர் வெளியேறினர்.  தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நான்கு வைல்ட் கார்ட் என்ட்ரிஸ் மற்றும் விருந்தினராக மூன்று பேரும் வந்துள்ளனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீஸனும் ஒவ்வொரு விதத்தில் பிரபலமாக காணப்படும். ஆனால் இந்த சீசன் சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

அதிலும் குறிப்பாக இந்த சீசனில் கலந்து கொண்ட திவாகர், அரோரா, கலையரசன்  சமூக ஊடகங்களில் சர்ச்சைகள்  மூலம் பிரபலமானவர்கள். அவர்களை பிக் பாஸ்  நிகழ்ச்சிக்குள் இணைத்தது மிகப்பெரிய  ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. எனினும் அதில் திவாகர்  சற்று தேறியவராக காணப்படுகின்றார். 


இந்த நிலையில்,  பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக  உள் நுழைந்த திவ்யா கணேஷ்  அதிரடியாக ஆக்சன்  காட்டி இருந்தார். இதனால் அவருக்கு மேனேஜர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவருடைய மேனேஜர் பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன. 

அதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த உடனே அவருக்கு மேனேஜர் பதவி கொடுத்துள்ளார்கள். ஆனால் தற்போது  திவ்யாவை மேனேஜர் பதவியில் இருந்து தூக்கி விட்டு அந்த இடத்திற்கு விக்ரமை போடுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள விஜே பிரியங்கா, மஞ்சரி  மற்றும் தீபக் ஆகியோர் திவாகரை வைத்து ஃபன் எடுத்துள்ளனர். அதன்படி வந்த கெஸ்ட் மூன்று பேரும்   திவாகரை நடிக்கச் சொல்லுகின்றார்கள். 

அதில் முதலாவதாக திவாகர்,  இந்த வீட்டில் வாட்டர் மெலன் ஒருத்தன் இருக்கான். அவனுடைய தொல்லை தாங்க முடியல என்று தன்னை பற்றி தானே நடித்து காட்டியுள்ளார்.  அதன் பின்பு இன்னும் ஒருத்தர் இருக்கின்றார். எங்கு பிரச்சினை நடந்தாலும் ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. என்று  நாட்டாமை பண்ணுவதாக சபரியை  குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்பு விஜய் பிரியங்கா   சோபா சேனலை பார்ப்போம் என்று சொன்னதும்,  உடனே  திவாகர் சோபா பாய் போல  நடித்துக் காட்டுகின்றார் .   இறுதியில்  தீபக்கிற்கு பிசிகல்  தெரபி பண்ணி விடுவதாக  கூறுகின்றார். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.  

Advertisement

Advertisement