• Jan 19 2025

என்னோட அரசியல் வாழ்க்கையே போச்சு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிர்ச்சித் தகவலைக் கூறிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகியது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். அவர் தொகுத்து வழங்கும் விதம் மற்றும் மக்களின் குரலாக போட்டியாளர்களிடம் பேசுவது, அவர்கள் தப்பு செய்தால் தட்டிக் கேட்பது என இவர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார்.

இதனால் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது, இப்போது இந்த நிகழ்ச்சியானதுவது சீசனை எட்டி உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்


இதனால் கமல்ஹாசனின் பெயரும் டேமேஜ் ஆகி வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியாவில் கமலை ஏராளமானோர் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ஷோவிலேயே தப்பை தட்டிக்கேட்காத நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இந்த நிகழ்ச்சியால் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.அதன்படி இந்த சீசனுடன் பிக்பாஸில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸில் இருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக இதுவே கமல்ஹாசனின் கடைசி சீசனாக இருக்கும் என நம்பத்தகுந்த வாட்டாரங்களில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement