உலகின் மிகப்பெரிய திரைப்பட விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள், ஒவ்வொரு திரைப்பட கலைஞரின் கனவாகவே திகழ்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 97வது ஆஸ்கார் விருது விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பு ஒரு முக்கியமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகாடமியின் தலைவர் ஜேனட் யங் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தத் தகவலை அறிவித்துள்ளனர். மேலும், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களின் நெடுங்கால முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இப்போது ஆஸ்கார் விருதுகளில் ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான சிறப்பு பிரிவை அறிமுகப்படுத்துகிறோம்." என்று கூறியுள்ளனர்.
இந்த புதிய விருதுப் பிரிவு, 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள 100வது ஆஸ்கார் விழாவில் முதல் முறையாக வழங்கப்படும். அதற்கான தகுதி படங்கள் 2027 ஆம் ஆண்டு வெளியான படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.
இது போன்ற அபாரமான திறமைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே ஆஸ்கார் விருதுகள் வழங்கவில்லை என்பதற்காகவே இப்போது இந்த புதிய பிரிவை உருவாக்கியுள்ளார்கள். இது, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரமாக கருதப்படுகின்றது. அகாடமி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், இந்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான 'RRR' திரைப்படமும் உள்ளடங்கியுள்ளது.
Listen News!