சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணிக்கு எதிராக வித்யா சாட்சி சொல்லுகின்றார். அவர் மனோஜுக்கு ஒன்றும் தெரியாது, எல்லா உண்மையையும் மறைத்து தான் ரோகிணி அவரை திருமணம் செய்தார் என்ற உண்மையை சொல்லுகின்றார்.
ஆனால் ரோகிணி முத்துவின் குடும்பம் தனக்கு எதிராக தனது உயிர் தோழியை சாட்சி சொல்ல வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். மேலும் வித்யாவின் கணவர் முருகனை விசாரிக்க அனுமதி கேட்கின்றார்.
அதன்படி நீதிபதியும் அவருக்கு அனுமதி கொடுக்க, உங்களுக்கு எப்படி கல்யாணம் நடந்தது என்று முருகனிடம் கேட்க, முத்துவும் மீனாவும் செய்து வைத்ததாக சொல்லுகின்றார். அத்துடன் முத்துவுக்காக உயிரையே கொடுப்பேன், அவர் என்ன சொன்னாலும் செய்வேன் என்று சொல்லுகிறார்.
அந்த பாயிண்டை பிடித்த ரோகிணி, அப்படி என்றால் முத்துவுக்காக பொய்யும் சொல்லுவீர்கள் தானே. அதனால் தான் வித்தியாவை வைத்து எனக்கு எதிராக பொய் சாட்சி சொல்ல வைத்துள்ளீர்கள் என்று வித்தியாவின் வாக்குமூலத்தை தவிடு பொடியாக்குகின்றார்.

அதற்குப் பிறகு பிரவுன் மணி, நான் ரோகிணியின் வாழ்க்கைக்காகத்தான் நடிக்க வந்தேன். மனோஜ்க்கு எந்த உண்மையும் தெரியாது என்று சொல்ல, மனோஜ்க்கு எல்லா உண்மையும் தெரியும் அவர் சொல்லித்தான் பிரவுன் மணியை நடிக்க வைத்தேன் என கேஸை திசை திருப்புகின்றார் ரோகிணி.
மேலும் நான் இந்த பொய்யை எனது மாமியாருக்காக தான் சொன்னேன். அவர் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். அதற்காகத்தான் அவரை நடிக்க வைத்தேன் என்று சொல்ல, விஜயா எழுந்து நின்று ஏன் பொய் சொல்லுகிறாய்? என்று கத்துகின்றார்.
மேலும் பிரவுன் மணியின் பேங்க் டீடைல்ஸ் செக் பண்ணினால் தெரியும் என்று அவருடைய போனை வாங்கி பார்க்க, மனோஜின் பெயரில் இருந்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பிறகு தான் மனோஜ் தாங்கள் பிசினஸ் பார்ட்னஸ் ஆக இருப்பதாகவும், அதை பயன்படுத்தி ரோகிணி அவருக்கு காசு அனுப்பி உள்ளதாகவும் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!