• Feb 14 2026

லெஜண்ட் சரவணாவின் ‘லீடர்’ க்ளிம்ஸ் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு ‘லீடர்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவையும், பிரதீப் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை மேத்யூ மகேஷ் வடிவமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த ப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நடிகர் லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் ‘லீடர்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் சேர்த்து 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த க்ளிம்ஸ் வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் வீடியோவை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

சுமார் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த சாதனை, லீடர் படம் லெஜண்ட் சரவணாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement