வாரா வாரம் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக காணப்படுகின்றது. கடந்த வருடத்தில் தமிழில் ஏராளமான படங்கள் வெளியாகி இருந்தாலும், அதில் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. பல படங்கள் எதிர்பார்ப்பை எட்டாமல் தோல்வியை சந்தித்தன.
இந்தியாவில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு உணர்வு. சிலருக்கு மதம் போன்றது. தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த நாளை திருவிழா போல கொண்டாடுவார்கள். முதல் நாள் முதல் காட்சியில் காணப்படும் தியேட்டர் அனுபவமே தனி மகிழ்ச்சியை கொடுக்கும்.
அதே நேரத்தில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளுக்கு சவாலாக காணப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே புதிய படங்களை பார்க்கும் வசதி அதிகரித்துள்ளதால், தியேட்டர் கலாச்சாரம் மெல்ல மெல்ல மாறி வருகின்றது. இருப்பினும், பெரிய திரை அனுபவத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், இந்த வாரம் தியேட்டர்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதை பார்ப்போம். அதன்படி பெப்ரவரி 13-ம் தேதி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் மை லார்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதில் ஹீரோயினாக சைத்ரா நடிக்கின்றார். இந்த படத்தை பார்த்த மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி இருக்கின்றார்கள். எனவே இந்த படம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பூக்கி படமும் வெளியாகின்றது. இந்த படத்தை அஜய் திஷன் என்பவர் இயக்கியிருக்கிறார். இதுவரை இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், அப்டேட்கள் எல்லாம் தரமாக இருக்கின்றன. எனவே இந்த படம் ஹிட் படமாக அமையுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அர்ஜுன் இயக்கத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருக்கும் படம் சீதா பயணம்.. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுன். எனவே இந்த படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
மேலும் பின்னணி பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா நடித்த படம் கா.. இந்த படத்தை நாஞ்சில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது தற்போது இந்த படமும் திரைக்கு வர உள்ளது.
இறுதியாக அஜயன் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் மைலாஞ்சி, ராஜசேகர் இயக்கத்தில் ஸ்வீட்டி பியூட்டி நாட்டி படங்களும் அன்றைய தினம் ரிலீஸாகவிருக்கின்றன.
Listen News!