• May 08 2024

கமல்ஹாசனிடம் ரோபோ ஷங்கர் கேட்ட அன்புப் பரிசு-வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என வெளியான அனைத்து மொழியிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து உள்ளது.

படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் அனைவருக்கும் பரிசுகளை அளித்திருந்தார். மேலும் கமலின் தீவிர ரசிகன் தான் ரோபோ சங்கர். இவர் படம் வெளியான நாள் முதலே திரையரங்கிற்கு சென்று கமல;ஹாசன் என்ட்ரியாகும் போது ஆரத்தி எடுத்து தடல்புடலாக கொண்டாடினார்.

இவரின் அன்பால் நெகிழ்ந்து போன கமல்ஹாசன் அவரை சந்திக்க வரும்படி அழைத்ததை அடுத்து, குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர் ஆண்டவரிடம் அன்பாக முத்தத்தைக் கேக்க அவரும் கன்னத்தில் முத்தத்தைக் கொடுத்திருக்கின்றார்.

இதனால் ரோபோ ஷங்கர் செம குஷியில் இருக்கின்றாராம் . சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement