தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ராபர்ட் மாஸ்டர். அழகன் என்ற படத்தில் மம்முட்டிக்கு மகனாக நடித்தார். அதன் பின்பு பல படங்களில் நடித்த ராபர்ட் மாஸ்டர், லாரன்ஸ் இயக்கிய படத்தில் ஊனமுற்ற நடன கலைஞராகவும் நடித்து இருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பங்கு பற்றிய நடிகை ரச்சிதாவுக்கு காதல் வலையும் வீசியிருந்தார். பிக்பாஸ் வீட்டில் இவர் பண்ணிய ரகளைகள் பார்ப்போரை ரசிக்க வைத்தது.
சமீபத்தில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படம் 40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கதைக்களத்தை கொண்டதாக அமைந்தது. குறித்த படத்தை வனிதாவின் மகள் ஜோதிகா தயாரித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
அண்மையில் ராபர்ட் மாஸ்டரின் அம்மா உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் ராபர்ட் மாஸ்டர் அழுதபடி நடனம் ஆடிய காட்சிகள் பார்ப்போரை வேதனைக்கு உட்படுத்தி இருந்தது. ராபர்ட் மாஸ்டரின் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் வனிதா வனிதாவின் மகள் ஜோவிகா ஷகிலா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரின் அம்மா உயிரிழந்த பின் அவருக்கு தந்தை உணவு ஊட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளது. தாயை இழந்து தவித்த ராபர்ட் மாஸ்டருக்கு அவருடைய தந்தை உணவு ஊட்டுவது பலரையும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு பலரும் தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!