சிறந்த நடிகையாக விளங்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' சீரியலில் சாமுண்டீஸ்வரி என்ற வில்லி கேரக்டரில் கெத்தான மாமியாராக வருகிறார். புடவையில் பாரம்பரியமான தோற்றத்துடன், குடும்பத்தை கட்டி காக்கும் பெண் கதாபாத்திரமாக அனைவரையும் கவர்ந்துள்ளார்.
மேலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் 'புஷ்பா' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற ரேஷ்மா, பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாகவும் பிரபலமானவர். மேலும் விஜய் டிவியின் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாகவும் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில், ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய சீரியல்களில் குடும்ப கொள்கைகளை பிரதிபலிப்பவராக வந்தாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி ஹீரோயினாகவே வலம் வருகிறார்.
Listen News!