• May 19 2024

தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக பல லட்ச ரசிகர்களை தனக்கென கொண்டு சினிமாவை கலக்கி வருகிறார் நம்ம தளபதி விஜய். இவர் இன்று 48 பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 66 வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு தளபதி ரசிகர்கள் லைக்களை அள்ளிக் குவித்து வருகின்றனர் தெறிக்க விட்டு வருகின்றனர்

இவருடைய பிறந்தநாளுக்கு திரைப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஷூட்டிங்கின்போது தளபதி விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement