• May 22 2024

நடிகை காஜல் அகர்வாலின் வீட்டுக்கு திடீர் விசிட்டடித்த ராசி கண்ணா- குழந்தையுடன் செய்யும் சேட்டையைப் பாருங்க

stella / 7 months ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வருபவர் ராசி கண்ணா. இவர் தெலுங்கில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார் அதே சமயம் அந்த படங்களில் கிளாமரையும் அதிகமாக காட்டி ரசிகர்களையும் வளைத்து போட்டுள்ளார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.


முதலில் இமைக்கா நொடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் சுமாராக ஓடின அதன் பிறகு நடிகை ராசிக்கண்ணா  அரண்மனை 3 சர்தார் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. 2023 கைவசம் அரண்மனை 4, மேதாவி போன்ற படங்களில் நடித்த வருகிறார்.


திரை உலகில் பிஸியான நடிகையாக ஓடும் ராசி கண்ணா இன்றைய தினம் காஜல் அகர்வாலின் வீட்டிற்குச் சென்றதோடு அவருடைய மகனுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement