• May 18 2024

மூத்த மகளின் இழப்பிற்கு பிறகு இரண்டாவது மகளுடன் வெளியே வந்த விஜய் ஆண்டனி- வைரலாகும் வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி - நடித்து வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம், பிரமாண்ட வெற்றிபெற்றது.


இந்த படத்தின் வெற்றி மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக மட்டும் இன்றி, இயக்குநராகவும் அடையாள படுத்தி கொண்டார்.இப்படி இவர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருடைய மூத்த மகள் உயிரிழந்தார். இவரின் இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது.

தன்னுடைய மகளின் இழப்பில் இருந்து வெளியே வர முடியாமல் விஜய் ஆண்டனி குடும்பமே தற்போது சோகத்தில் உறைந்துள்ள நிலையில், அண்மையில் விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இரண்டாவது மகளுடன் காரில் பிரஸ் மீட் ஒன்றிற்கு வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement