• Jan 18 2025

ஒரே ஒரு ஆளுக்காக போட்டி போடும் நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா..! யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய திரை உலகின் முக்கியமான படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா ஆகிய மூன்று பேரும் போட்டி போட்டு வருவதாகவும் மூன்று பேரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற கேள்வி தற்போது திரை உலகினர் மத்தியில் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கர்நாடக சங்கீத மேதை எம்எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தில் எம்எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.



அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவருமே முன் வந்துள்ளதாகவும் தங்களுக்கு இந்த படத்தின் வாய்ப்பை கொடுத்தால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்வதாகவும் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்எஸ் சுப்புலட்சுமி என்ற இசை மேதை கேரக்டரில் நடிப்பதே ஒரு வரம் என்றும் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றே தீர வேண்டும் என்று மூவருமே தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற முயற்சித்து வருவதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நயன்தாரா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா ஆகிய மூவருமே தென்னிந்திய திரை உலகில் பிரபலம் என்பதால் யாரை தேர்வு செய்வது என்று தற்போது தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது தெரியவரும்.

Advertisement

Advertisement