• Jan 19 2025

மீனா, ராஜி அறையின் கதவை தட்டிய சரவணன்.. திடீரென காணாமல் போன தங்கமயில்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கல்யாண காட்சிகள் குறித்த சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய எபிசோடில் தங்க மயிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நள்ளிரவில் தங்கமயில் அறைக்கு பதிலாக மீனா ராஜியின் அறையின் கதவை தட்ட அவர்கள் இருவரும் எழுந்து வந்து சரவணனை கேலியும் கிண்டலும் செய்யும் காட்சிகள் உள்ளன.

இதை அடுத்து கல்யாண பெண்ணை தூக்க வேண்டும் என்று குமரவேல் கூற அவருடைய பெரியப்பா முத்துவேல் கன்னத்தில் அடித்து ’எந்த பிரச்சனையும் வேண்டாம், நமக்கும் பாண்டியன் குடும்பத்திற்கும் தான் பிரச்சனை, அப்பாவி பெண்ணை தூக்க வேண்டாம் என்று கூறுகிறார்.



இந்த நிலையில் குமரவேல் ஆட்கள் தங்க மயிலை கடத்துவதற்காக மண்டபத்திற்கு வந்த நிலையில் மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரில் ஒருவர் தான் தங்கமயில் என்று நினைத்து இருவரையும் தூக்க திட்டமிடுகின்றனர். அப்போது தற்செயலாக தங்கமயில் அறையை விட்டு வெளியே வரும்போது ஒருவேளை இவர் தான் கல்யாண பொண்ணாக இருக்கும் என்று அந்த மூவரும் தங்கமயிலை தூக்க திட்டமிடுகின்றனர்.

இந்த நிலையில் அறையில் இருந்து திடீரென காணாமல் போன தங்கமயிலை பாக்கியம் பரபரப்பாக தேடிக் கொண்டிருக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement