• Apr 28 2024

56வயது நடிகருடன் நடிக்க இருந்த ராஷ்மிகா-கடைசியில் நடந்த ருவிஸ்ட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில்  ஒருவர்  தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகின்ற இவர் தமிழிலும் உச்ச நட்சத்திர நாயகர்களான ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இதனால் இவரிற்கு தமிழிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.


இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றார். இதனால் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருவார்.

இவரைப்போலவே திரையுலகில் பிசியாக இருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. ஆம், டோலிவுட், கோலிவுட் எல்லாம் தாண்டி தற்போது பாலிவுட் என தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


எனினும்  தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடிக்கபோவதாக சொல்லப்பட்டது.


ஆனால், கால்ஷீட் காரணமாக இப்படத்தில் ராஷ்மிகாவால் நடிக்கமுடியாமல் போக மாளவிகா மோகனன் இப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.




Advertisement

Advertisement

Advertisement