• Apr 28 2024

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகாவுக்கு இப்படியொரு லுக்கா? லீக்கான போட்டோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா முதல் பாகம் வெளிவந்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

மேலும் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. அல்லு அர்ஜுனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக புஷ்பா முதல் பாகம் அமைந்துள்ளது. 

அந்த சாதனையை புஷ்பா இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வரவேற்பை பெற்றது.


மேலும், புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் லுக் வெளியாகி உள்ளது.

அதன்படி, புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றத்தில் இருக்கும் ராஷ்மிகாவின் புகைப்படம் வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement