கடந்த ஏழு சீசன் களாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவி தரப்பிலிருந்து சில பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்கு பேர் இறுதி பட்டியலில் இருப்பதாகவும் இந்த நான்கில் ஒருவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக சூர்யா மற்றும் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் , சிம்பு மற்றும் அரவிந்த்சாமி ஆகிய நால்வரில் ஒருவர் தான் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே பிரகாஷ் ராஜ் மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இந்த இருவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட நான்கு நபர்களிடமும் மாறி மாறி விஜய் டிவி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!