• Jul 10 2025

திருமணத்துக்குப் பிறகு ரம்யா இப்புடியா? – இன்ஸ்டாவில் வைரலான ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். சின்னத்திரையில் தொடங்கி, சினிமா, ரியாலிட்டி ஷோ, புகைப்படங்கள் என பலவகையான ஊடகங்களில் தனது அழகையும் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றார்.


அந்தவகையில் தற்போது, ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. அந்த புகைப்படங்கள் ரம்யா பாண்டியனின் மாடர்ன் லுக்கை காட்டுகின்றன. ரம்யா பாண்டியன் தனது திருமணத்திற்குப் பிந்தைய காலங்களில், பொதுவாகவே தன்னுடைய ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை குறைத்திருந்தார்.


அதனால், ரசிகர்கள் சில நேரங்களில் “ பொம்மை போல இருந்த ரம்யா இனி மீண்டும் வருவாரா?” என்ற கேள்வியுடன் இருந்தனர். சமீபத்தில் வெளியிட்ட ஸ்டைலிஷான புகைப்படங்கள், ரசிகர்களுக்கு உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த புகைப்படங்களில் அவர் அழகான உடைகள் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அந்த போட்டோவில் தனது செல்லப் பிராணியையும் அருகில் வைத்துக் கொண்டுள்ளார். இந்த போட்டோஷூட் படங்களை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களுக்குள்ளேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement