• Jul 09 2025

மீண்டும் திரைக்கு வரும் டைனோசர்கள்.! வெளியானது 'Jurassic World: Rebirth’ படத்தின் அப்டேட்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, ‘Jurassic World: Rebirth’ என்ற புதிய திரைப்படம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தின்  முதன்மையான பிரீமியர் நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் பிரமாண்டமாக நடைபெற்றது.


1993ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த முதல் ஜுராசிக் பார்க் படத்திலிருந்து தொடங்கிய இந்த சாகசம் பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. ‘‘Jurassic World: Rebirth’ என்பது இந்தப் பிராண்டின் புதிய படியாக மட்டும் இல்லாமல், முன்னைய கதைகளுக்குப் புதுப் பக்கம் சேர்க்கும் முயற்சியாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


இப்படத்தின் இயக்குநராக கரேத் எட்வர்ட்ஸ் காணப்படுகின்றார். 2025 ஜூன் 17-ம் தேதி, லண்டனின் மிகப்பெரிய திரையரங்கு ஒன்றில் இந்த பிரீமியர் ஷோ நடைபெற்றது. அதன்போது, நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வந்த ரசிகர்கள் என கூட்டமாகத் திரண்டனர். அத்துடன் இப்படம் ஜூலை 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement