• Jan 15 2025

ராதிகா காலில் விழுந்த ராமமூர்த்தி..? பாக்கியாவுக்கு தெரியவந்த உண்மை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், மையூ வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருக்க,  அம்மா அங்கே என பாக்கியா விசாரித்து அம்மா வரும் வரை வீட்டில் வந்து இருக்குமாறு சொல்லுகிறார். ஆனாலும் மையூ தயக்கத்தில் நான் பார்க்குக்கு சென்று படிக்கிறேன் என செல்கிறார்.

அதன் பின்பு பாக்கி யா மனம் கேட்காமல் மையூவுக்கு  ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு அவருக்கு பாதுகாப்பாக அவருடன் இருக்கின்றார். இதன்போது பாக்கியா டென்ஷனாக இருப்பதை பார்த்த மையூ என்ன காரணம் என விசாரிக்க, ஈஸ்வரியை பற்றி சொல்லுகிறார் பாக்கியா.

மேலும் ஈஸ்வரியை நினைத்து பாக்கியா அழ, பாக்கியா அழுவதை பார்க்க முடியாமல் அம்மா விழுந்தப்ப நானும் அங்க தான் இருந்தேன். அம்மா பூவாஸ் தடக்கி தான் கீழே விழுந்தாங்க. பாட்டி அவர்களுக்கு ஹெல்ப் தான் பண்ணினாங்க என உண்மையை சொல்லுகிறார் மையூ.

இதனால் நீ உண்மையைத்தான் சொல்லுறியா? நீ நன்றாக பார்த்தியா? என பாக்கியா அதிர்ச்சியில் மையூவை கட்டிப்பிடித்து இந்த ஹெல்ப்ப நான் மறக்கவே மாட்டேன் என சொல்லுகிறார்.


அந்த நேரத்தில் ராதிகாவும் கமலாவும் பார்க்குக்கு வர, அங்கு மையூ பாக்கியாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகின்றார்கள்.

மேலும் அங்கு வந்து நீ எதுக்கு அவ கூட பேசுற? அவங்க எங்க  நிம்மதியை கெடுத்தவங்க.. உங்க தங்கச்சி பாப்பாவ இல்லாமல் செஞ்சவங்க என பாக்கியாவுக்கு திட்ட ,  அப்படி பேச வேண்டாம் என கமலாவுக்கு சொல்கின்றார் மையூ.. இதனால் பாக்கியா கொடுத்த ஸ்னாக்ஸை தட்டிவிட்டு மையூவை இழுத்துச் செல்கிறார் கமலா.

அதன் பின்பு பழனிச்சாமியுடன் அட்வகேட்டை சந்தித்த பாக்கியாவிடம், மயூவை நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டி வந்தால் மட்டுமே ஈஸ்வரியை காப்பாற்ற முடியும் என சொல்லுகின்றார். இதனால் மையூவை எப்படி கூட்டி வருவது என குழம்பிப் போய் இருக்கின்றார் பாக்கியா.

இறுதியாக வீட்டில் ராமமூர்த்தி அழுது கொண்டு இருக்க பாக்கியா அவரை சமாதானப்படுத்துகிறார். ஆனால் தான் ராதிகா காலில் விழுந்து இந்த கேசை வாபஸ் வாங்க சொல்வதாக ராமமூர்த்தி கிளம்ப, பாக்கியா அவரை தடுத்து ஈஸ்வரி நாளைக்கு எப்படியும் வெளிய வருவாங்க என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement