• Sep 26 2023

மாமனார் குறித்து மருமகன் வெளியிட்ட திடீர்ப் பதிவு... குஷியில் ரஜினி ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் குடும்ப விஷயங்கள் பற்றியும் பிரிவுக்கான காரணங்கள் பற்றியும் ஏராளமான செய்திகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.


ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றி கவலைப்படாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் .அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. 

அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் 'ஜெயிலர்' படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் மனைவியைப் பிரிந்த நிலையிலும் நடிகர் தனுஷ் தனது மாமனாரின் படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதாவது இப்பதிவில் "இது ஜெயிலர் வாரம்' என மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கின்றார். இதோ அந்தப் பதிவு..!


Advertisement

Advertisement

Advertisement