• Sep 13 2024

''இந்த இடத்திற்கு என்னால வரவே முடியல'' - கண்ணீர் விட்ட யாஷிகா ஆனந்த்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விபத்தில் உயிரிழந்த தோழியை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத யாஷிகா ஆனந்த்.தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார்.

கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தாண்டவமாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், விபத்து நடந்த இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தவர்களை சந்தித்து பேசினார்.அப்போது இந்த இடத்தில் தான் விபத்து நடந்தது, என்னை இவர்கள் தான் காப்பாற்றினார்கள். இதுபோன்ற நல்லவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு என்னால வரவே முடியல என்று தனது தோழியை நினைத்து கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement