• Sep 20 2024

ரஜினிகாந்த் - தனுஷ்.. மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாக நடித்த நடிகை.. அஜித் படத்திலும் நாயகி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் தனுஷ் ஆகிய இருவருக்கும் மனைவியாக நடித்த நடிகை குறித்த தகவல் கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் மனைவியாக மஞ்சுவாரியர் நடித்திருந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பதை அடுத்து மாமனார் மருமகன் ஆகிய இருவருக்கும் அவர் மனைவியாக நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



ஏற்கனவே நடிகை ஸ்ரேயா, ரஜினிக்கு ஜோடியாக ’சிவாஜி’ படத்திலும் தனுஷ் ஜோடியாக ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திலும் நடித்திருந்தார் என்பதும் அதேபோல் தான் மஞ்சு வாரியர் இருவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அஜித் நடித்த ’துணிவு’ என்ற படத்தில் நாயகி ஆக மஞ்சு வாரியர் நடித்திருந்தார் என்பதும் விரைவில் வெளியாக இருக்கும் ’விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதி மனைவியாகவும் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement