• Apr 28 2024

மனைவியை தூக்கி தண்ணீரில் வீசிய ராஜா ராணி சீரியல் சித்து - தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியல் மூலம் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலைத் தொடர்ந்து அண்மையில் இருவரும் திருமண பந்தத்திலும் இணைந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. திருமணத்தை அடுத்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் சித்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகனாகவும் ஸ்ரேயா ஷு தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி என்னும் சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார். இது தவிர இருவரும் இணைந்து விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.

தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அப்போது அங்கே எடுத்த வீடியோ ஒன்றை சித்து வெளியிட்டு இருக்கிறார்.WWE ஜான் சீனா போல அவர் மனைவியை தூக்கி தண்ணீரில் போட்டிருக்கிறார்.அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement