• Dec 09 2022

எப்படியாவது ஆறு மாதத்துக்குள் முடித்து தாருங்கள்- ஷங்கருக்கு அழுத்தம் கொடுக்கும் உதயநிதி

Listen News!
stella / 2 months ago
image
Listen News!

விக்ரம் படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட்டானது உயர்ந்துள்ளது. இதனால் படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்து விட்டன. அதன் படி கமல்ஹாசன் அடுத்ததாக ’இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பlத்தின் படப்பிடிப்பானது நான்கு ஆண்டுகளுக்கு முதலே ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால்  மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 


 அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டு வருகிறார்.ஒரு மாதத்தில் 10 நாட்கள் என இந்த படத்துக்காக கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும் தேதியை ஒதுக்கியுள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் தொடங்கி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் “படத்தை எப்படியாவது 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்” என இயக்குநர் ஷங்கருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.