• Jun 16 2024

விருந்துக்கு காத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்,புகைப்படம் உள்ளே !

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

2009 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் கில்லி படம் மூலமாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.தொடர்ந்து தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.


2013 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில்  அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று,தேவ்,என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளதுடன்  இந்த ஆண்டு வெளியான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமொன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வைரலாகி வருகிறது.காதில் செம்பருத்தி பூவுடன்  பச்சை நிற ஆடையில் டைனிங் டேபிளில் இவர் காத்திருக்கும் இரசிகர்கள் மனதை காந்தமாக கவர்கிறது என்றே சொல்லாம்.


Advertisement

Advertisement