• Oct 16 2024

தமிழையும் சரஸ்வதியையும் கண்டதும் திட்டித் தீர்த்த ராகினி- கோதையிடம் அடம்பிடிக்கும் நடேசன்- குழப்பத்தில் அர்ஜுன் குடும்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோயிலுக்கு தமிழும் சரஸ்வதியும் வருவதைக் கண்ட ராகினி சொல்லாத இடத்திற்கு எப்பிடி வருவீங்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா எனத் திட்ட வசுவும் நடேசனும் வந்து இது கோயில் யாரையும் வரவேணாம் என்று சொல்லுற உரிமை உனக்கு இல்லை.மாப்பிள்ளை ராகினியை கூட்டிட்டு போங்க என்று சொல்ல அர்ஜுன் ராகினியைக் கூட்டிக் கொண்டு போகின்றார்.

தொடர்ந்து கோதையையும் நடேசனையும் இருக்க வைத்து எல்லோரும் தலையில் தண்ணீர் ஊற்றுகின்றனர். அப்போது ராகினியும் தண்ணீரை ஊற்றி விட்டு இருக்கும் போது தலை சுற்றுவதாக சொல்ல நடேசன் ராகினி காலைய இருந்து சாப்பிடவில்லை அதான் போல மாப்பிள்ளை ராகினியை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய்ட்டு வாங்க என்று சொல்ல அர்ஜுன் ராகினியைக் கூட்டிட்டு வெளியே போகின்றார்.


அந்த நேரம் தமிழையும் சரஸ்வதியையும் கூப்பிட்டு தன் தலையில் தண்ணீர் ஊற்ற சொல்ல கார்த்திக் அவர் தான் பிள்ளை இல்லை என்று சொல்லியாச்சே எதுக்கு தண்ணீர் ஊற்றனும் என்று சொல்ல சந்திரகலா, அது தான் உங்க அப்பா ஆசைப்படுறாரே மாப்பிள்ளை அவங்கள பண்ண விடுங்க என்று சொல்ல பின்னர் தமிழும் சரஸ்வதியும் தலைக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர்.

தொடர்ந்து எல்லோரும் கோதை மற்றும் நடேசனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க நடேசன் தமிழையும் சரஸ்வதியையும் அழைக்கிறார். ஆனால் ராகினி அதெல்லாம் முடியாது கொலைகாரன் ஆசீர்வாதம் வாங்கக் கூடாது என்று அடம் பிடிக்க நடேசன் அவங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியே ஆவேன் என்று அடம்பிடிக்கின்றார். இதனால் ராகினி கோபித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போகின்றார்.கோதையும் நடேசனும் அவர்களுக்கு ஆசீர் வழங்குகின்றனர்.


தொடர்ந்து வீட்டுக்கு வரும் ராகினி இனிமேல் ஒரு நிமிஷம் கூட நாங்க இங்க இருக்கக் கூடாது வீட்டை விட்டு போகலாம் என்று சொல்ல அர்ஜுன் என்ன சொல்லி ராகினியைத் தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் யோசிக்கின்றார். அந்த நேரம் அர்ஜுனின் அம்மா நாங்க வீட்டை விட்டுப் போனால் நாங்க தமிழ் கிட்ட தோத்திட்டோம் என்று சொல்லுவாங்க அவ்வளவு தானே என்று சொல்ல ராகினி யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement