• Oct 16 2024

மீண்டும் பைக் ரைடுக்கு மாஸாக கிளம்பிய அஜித்- ஷாலினி வெளியிட்ட செஃல்பி போட்டோ- அப்போ விடாமுயற்சி சூட்டிங் அவ்வளவு தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என ரசிகர்களால் நம்பப்படுகின்றது. அஜித் நடிப்பைத் தாண்டி  மற்றபடி பைக்கில் வெகு தூரம் பயணம் செய்வது, கார் ரேஸில் கலந்து கொள்வது, ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு வருவதும் உண்டு.


2021ம் வருட இறுதியில் தனது பைக்கர் கிளப் நண்பர்களுடன் சேர்ந்து சிக்கிம் வரை 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்தார். அதன்பின் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமாக அவர் பயணம் செய்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் பைக் ரைடு செய்தார். இமாச்சல பிரதேசம், மணாலி, ரோதாங், அதன்பின் காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக், லே, ரிஷிகேஷ், கேதர்நாத்,பத்ரிநாத் ஆகிய பகுதிகளிலும் ரைடு செய்தார். இந்நிலையில், இப்போது மீண்டும் தனது பைக் ரைடை அவர் துவங்கியுள்ளார்.


 இந்த முறை ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற இடங்களில் பைக் ரைடு செய்யவுள்ளார். இது குறித்த அஜித்தின் செல்பி புகைப்படத்தையும் ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement