நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா’ படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது வசூலையும் வாரி அள்ளியது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ’காஞ்சனா’ படத்தை 4ஆம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
’காஞ்சனா’ படத்தின் மூன்று பாகங்களிலும் ஹீரோயினுக்கு வெயிட்டான கேரக்டர் இருக்கும் என்பதை போல் நான்காம் பாகத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக இளவரசி நூர்ஜஹான் என்ற கேரக்டர் மிருணாள் தாக்கூருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது போலவே இந்த படத்திலும் அவருக்கு மிகச்சிறந்த வேடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மற்ற இரண்டு நாயகிகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!