• May 19 2024

பாக்கியாவால் ஏற்பட்ட அசிங்கத்தால் ராதிகா எடுத்த முடிவு-திருதிருவென முழிக்கும் கோபி – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி.விறுவிறுப்பாக செல்லும் இத் தொடரின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

பாக்கியா வீட்டில் ஜெனி எல்லோரும் வருகிறார்கள் என்பதால் யூட்யூப் வீடியோவை பார்த்து சட்னி அரைத்து இட்லி ஊத்தி வைக்க திட்டம் போட்டு அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக சட்னிக்கு தேவையானதை தயார் செய்த நிலையில் இட்லிக்கு மாவு ஊற்றும்  போது செழியன் அங்கு வந்து ஜெனியுடன் ரொமான்ஸ் செய்து மொத்த மாவையும் கீழே கொட்டுகிறார். அதன் பின்னர் செழியன் நான் போய் ஹோட்டலில் வாங்கி வந்து விடுகிறேன் என கூறி வெளியே சென்று விட அதற்குள் எல்லோரும் வந்து விடுகின்றனர்.


ஆனால் ஜெனி உங்களுக்காக நானே சமைத்து விட்டேன் நீங்க எல்லாரும் போய் குளிச்சிட்டு தயாராகி வாங்க என மொத்த பேரையும் மேலே அனுப்பி வைத்துவிட்டு.உடனே  ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பொருட்களை தான் சமைத்தது போல அனைத்தையும் பாத்திரங்களுக்கு மாற்றுகிறார். அத்தோடு ஜெனியின் நடவடிக்கையில் சந்தேகப்படும் எழில் இதை கண்டுபிடித்துவிட பிறகு பாக்யாவிடம் சொல்ல இருவரும் கீழே வருகின்றனர்.

அத்தோடு செழியன் இந்த மூணு நாளும் ஜெனிதான் சமைச்சா அவ்வளவு சூப்பரா இருந்துச்சு என பில்டப் கொடுக்க ஜெனி நான் சமைக்கலன்னு ஏற்கனவே சொல்லிட்டேன் நீ கொஞ்சம் அமைதியா இரு என செழியனை அடக்குகிறார். மேலும் இந்த பக்கம் இவர்கள் இப்படி கலகலப்பாக இருக்க அந்த பக்கம் ராதிகா கோபமாக பேச சென்ற இடத்தில் எது பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு ராதிகாவின் அம்மா என்ன ஆச்சு என கேட்க கோபி அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லி சமாளித்து விட்டு மேலே செல்கின்றார்.




அடுத்ததாக ராதிகா ரூமுக்குள் என்ன அசிங்கப்படுத்தினவங்க முன்னாடி நாம நல்லபடியாக வாழ்ந்து காட்டணும் என சபதம் எடுக்கிறார். வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க முடியாமல் கோபி திக்கி திணறுகிறார்.


Advertisement

Advertisement